வடக்கு கடற்பரப்பில் நாரா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இதுவரை வெளிவராதது ஏன்? என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை பொன்னாவெளி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே சுண்ணக்கல் அகழப்படும் என கடற்றொழில் அமைச்சர் கூறுகின்றார், ஆனால் வடக்கில் கடலட்டை பண்ணைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரா அமைக்கப்பட்டது ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.