ETF மற்றும் EPF அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்! ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவிப்பு!

ஊழியர்களின் செலுத்தப்படாத ஊழியர் சேமலாப நிதியம் (ஈபிஎஃப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈடிஎஃப்) ஆகிய கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டின் தனது முதல் கடமையாக, இதற்குரிய ஆலோசனைகளை அமைச்சின் செயலாளருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரிவித்த அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பில் 2000 க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக  சட்டத்தரணிகளுக்கான கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும்  அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply