தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான யாழ். நீதிமன்ற வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகததால், திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு மீண்டும் அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைக்கக் கால அவகாசம் கோரினார்.

இதையடுத்து எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்கக் கால அவகாசம் வழங்கி எதிர்வரும் ஜீன் 20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றதைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply