ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா எதிர்வரும் மே மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.