சர்வதேச தொழிலாளர் தினத்தில் இரண்டு மே தினக் கூட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மே தின பேரணி கொட்டகலை பொது மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பிற்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேரணி மற்றும் அணிவகுப்பில் கணிசமான எண்ணிக்கையிலான மலையக தோட்டத் தொழிலாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகல், கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணிக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.