பிரமிட் திட்டத்தை நடத்தி வருவதாக நம்பப்படும் தனியார் நிறுவனமான ஒன் மக்ஸ் டிடி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு, நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்துவதற்கான செயல்முறையை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன் மக்ஸ் டிடியின் நான்கு பணிப்பாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இன்றைய தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.