தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,400 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இலங்கையில் அண்மைய மாதங்களில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டு இரண்டு இலட்சத்தைத் தொட்டிருந்தது.

ஆயினும், அண்மையில் இது சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரிக்கும் தன்மை காணப்படுகிறது.

இதன்படி, இன்றைய தினம் 24 கரட் –  1 கிராம் தங்கத்தின் விலையானது 24,460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் – 1 கிராம் தங்கத்தின் விலை 22,430 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,400 ரூபாவாகவும் காணப்பட்டது.

மேலும், 21 கரட் -1 கிராம் தங்கத்தின் விலை 21,410 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply