ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தேசிங்

சோஷியல் மீடியாக்களில் நடிகர் ரஜினிகாந்த், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியை பாராட்டி பேசும் ஓடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

பாராட்டியதுடன் நிற்காமல் தனக்காக ஒரு கதையையும் தயார் செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளார் ரஜினி.. ஆனால் ரஜினியின் பாராட்டு எந்த அளவுக்கு தேசிங் பெரியசாமிக்கு சந்தோஷத்தை தந்ததோ அதே அளவுக்கு அவரை இன்னொரு பக்கம் வருத்தப்படவும் செய்துவிட்டது.

காரணம் ரஜினியுடன் அவர் பெர்சனலாக பேசிய ஓடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதில் தேசிங்கிற்கு ரொம்பவே வருத்தம்.

ரஜினி தன்னை பாராட்டினார் என தெரியப்படுத்தும் விதமாக தேசிங் பெரியசாமி தனது நெருங்கிய நண்பர்களுக்கு இந்த ஆடியோவை அனுப்பியதில் அவர்களில் யாரோ ஒருவர் இதனை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

இருந்தாலும் மனது கேட்காத தேசிங் பெரியசாமி இதற்காக தனது வருத்தத்தை பதிவு செய்தார். அதோடு, ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை நேரிலேயே சந்தித்துள்ளார்.

அப்போது ரஜினிக்கு நன்றி தெரிவித்ததுடன் இந்த ஆடியோ வெளியானது குறித்து விளக்கம் அளித்து தனது வருத்தத்தையும் தெரிவித்தாராம். ரஜினியை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார் தேசிங் பெரியசாமி.

You May Also Like

About the Author: kalaikkathir