திருவள்ளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 14,414 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் கொரோனா தொற்றில் இருந்து 10,370 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 3,512 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.