மரக்கறி, மீன்களின் விலை அதிகரிக்கும் அபாயம் !

வானிலை மாற்றத்தால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் அஜித் களுதரகே தெரிவித்துள்ளதோடு இந்நாட்களில் மீன் விலையும் வேகமாக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply