கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தியே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சரா அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
