சாவகச்சேரி நகரசபையானது கட்டடங்கள் அமைப்பதற்கான உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடைத்தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துறை சார்ந்தவர்களும், வர்த்தகர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சந்தை வளாகத்தில் உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் மூலம் சுமார் 38.80 மில்லியன் ரூபா செலவில் புதிய கடைத் தொகுதிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெற்று வருகின்றன.
இதேவேளை குறித்த கட்டிடத் தொகுதி அமைக்கப்படுகின்ற முறைமையானது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அமைக்கப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.