10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

காலநிலை வலயங்களுக்கு ஏற்ப காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில் 10 தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்து தெரிவிக்கையில் “10 தாவரவியல் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை தாவரவியல் பூங்காக்கள் திட்டமிடப்பட்ட விதத்தில் காலி – அக்மீமன தாவரவியல் பூங்கா, வவுனியா தாவரவியல் பூங்கா, அம்பாறை, பொலன்னறுவை, தெனியா ஆகிய இடங்களை நாம் இனங்கண்டுள்ளோம். எனவே, பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நாம் இதை அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply