தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கண்டனம் தெரிவித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து பதிவிடுகையில் நான்கு வயது சிறுமி மீதான கொடூரத் தாக்குதல் நாட்டையே உலுக்கியதாகவும் இந்த தாக்குதலை நடத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, சிறுமியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளதுடன் சிறுவர்கள் இன்றி நாளைய எதிர்காலம் கிடையாது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு அதி உச்ச முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் இதன்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.