யாழில் தனியார் கடை ஒன்றின் உரிமையாளராக விளங்கும் நபர் ஒருவரின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக தாள் நாணயத்தை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இவர் மக்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை தானமாக வழங்குவதான தன்னை பிரபலப்படுத்தி வரும் தியாகி குறித்து அண்மைக்காலமாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் தமிழர்கள் மத்தியில் தன்மானம் மேலோங்கியுள்ள நிலையில், இலவசம் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாக மாற்றும் சதித்திட்டத்தின் பின்னணியாக இருக்கலாம் என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பெருந்தொகை பணத்தை தனது காலில் போட்டு மிதித்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய நாணயத்தை சேதப்படுத்துவது பாரிய குற்றமாகும் எனவே இதனை சட்ட ரீதியாக அணுகினால் தியாகி என அடையாளப்படுத்தப்படும் கோடிஸ்வரர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.