போக்குவரத்து கடமையில் இருக்கும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கப்படும் 1600 ரூபாய் மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட உள்ள நிலையில் இதுவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி/போக்குவரத்து பதவியை வகித்த அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 2,500 ரூபாவில் இருந்து 7,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.