நாட்டில் முட்டையின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய , முட்டை ஒன்றின் விலை 55 ரூபாய் தொடக்கம் 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதோடு சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதனைத்தொடர்ந்து , நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.