எதிர்க்கட்சி தலைவரான சஜித் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து இது தொடர்பில் அவர் கூறுகையில் “பல்வேறு பேதங்கள் மூலம் மனித இனத்திற்கிடையே மோதல்களை உருவாக்குவதற்குப் பதிலாக, பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்களாகவும் சகோதர வாஞ்சையுடன் நேசிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இது நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
வங்குரோத்தாகியுள்ள நம் நாட்டிற்கும் இது ஒரு சிறந்த உதாரணமாக நான் பார்க்கிறேன். இனம், மதம், சாதி, குலம், கட்சி, அந்தஸ்து என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டு நமது நாட்டை உலகில் முதலாவது இடத்துக்கு கொண்டு செல்லும் பயணத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். அதற்காக அனைவரும் ஒரே புரிந்துணர்வுடன் இந்த தியாகத் திருநாளான ஈதுல் அல்ஹா பெருநாளை சகோதரத்துவத்துடன் கொண்டாடுவோம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”என இதன்போது அவர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.