நாட்டில் பரவும் நோய் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயத்தை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.

இந்நிலையில் , நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து , இன்று (01) முதல் சுகாதார அமைச்சினால் சுமார் 1,200 சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 3,500 குடும்ப சுகாதார செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து , எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருந்தை உட்கொள்ளாத 100 நோயாளர்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply