பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர்- சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2 இடத்திலும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இடதுசாரியான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள படி
கெயர் ஸ்டேமர் பிரிட்டன் உத்தியோகபூர்வமாக பிரதமராக பதவியேற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதவி விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply