உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் -ஜனாதிபதி பணிப்புரை!

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று (05) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, விகாரையின் மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், கலந்துரையாடிலும் ஈடுபட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,“கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக நாங்கள் இப்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடலை முடித்துள்ளோம்.

அடுத்த இரண்டு வருடங்களில் திட்டமிட்ட வகையில் செயற்பட்டால் மீண்டும் கடன் பெறாத நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியும்.” என சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன்.

இன்று இந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.அதன்படி தற்போது அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply