நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் , வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது நோக்கங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணம் நாளை முதல் குறைக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் மூலம் மொத்த மின் கட்டணத்தை 10 வீதமாகக் குறைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழு கட்டணங்களை 22.5 வீதமாகக் குறைக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.