கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு சடலம் மீட்பு!

நேற்று (15) இரவு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தங்கியிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுடைய ஒல்லியான உடலும் 05 அடி 04 அங்குல உயரமும் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply