மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோறு மற்றும் கறி, ப்ரைட் ரைஸ்மற்றும் கொத்து என்பவற்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.