இலங்கையின் முன்னணி சிங்கள தொலைக்காட்சி நிறுவனமாகிய சுவர்ணவாஹினியில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் குறித்த தொலைக்காட்சியில் இலங்கைக் கடற்படையின் வாத்தியக்குழுவினரது நிகழ்வு ஒன்று ஒளிபரப்பாகியது.
அந்த இசைக்குழுவிலிருந்த சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து குழாமிலிருந்த ஏனையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
எனினும் அவர்களுக்குத் தொற்று பரவியிருக்கவில்லை.
இந்தநிலையில் சுவர்ணவாஹினி நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுகாதார அதிகாரிகள் நிறுவன ஊழியர்களையும் பரிசோதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.