மேலும் அதிகரித்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்!

ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க , விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தொழிலதிபர் திலித் ஜயவீர , தொழிலதிபர் தம்மிக்க பெரேரா , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றமையைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டிமிக்கதாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply