மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான அறிவிப்பை குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் போராட்டக் கூட்டணியைச் சேர்ந்த லஹிரு வீரசேகர,சட்டத்தரணி நுவான் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து , எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதேவேளை , தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.