நாட்டிலுள்ள 40 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களில் அடுத்த தேர்தலில் நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள், வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்பும் திறன் போன்றவற்றை ஆய்வு செய்த பிறகே வேட்பாளரை தேர்வு செய்வோம் என 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் முறையாக வாக்களிக்க இருப்பதனாலும் சுமார் 20 லட்சம் இளைஞர்கள் வெளிநாட்டில் இருப்பதனாலும் வேட்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அணியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றுமொரு அணியாகவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றுமொரு அணியாகவும் தேர்தலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.