இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு துறை தகவல்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, இராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் அதை ஏற்க மறுக்கவே கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவ தளபதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அவர்கள் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
அப்போது ஹசீனாவின் தங்கை ரெகானா ஆட்சியை இராணுவத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தியதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் ஹசீனாவின் மகன் ஷாஜிப் வாஸத் ஜாய் டெல்லியில் வசிக்கும் மகள் சைமா வாஸத் ஆகியோர் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விட்டு பங்களாதேஷை விட்டு வெளியேறுமாறு கோரியுள்ளனர்.