வேட்புமனுவில் நாமல் கையொப்பம் – அதற்கான நிகழ்வில் கோட்டாவும் பங்கேற்பு

வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்புமனுப் பத்திரத்தில் இன்று கையெழுத்திட்டார்.

கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply