மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
வியாழக்கிழமை (செப். 12) காலை 6.00 மணி வரை இந்த அறிவுரை அமுலில் இருக்கும்.
இதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும் எனவும் அந்த அறிவுறுத்தலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இது தொடர்பில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.