கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த இருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து இரு வயோதிபர்கள் இன்று மாலை வரை உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சடலம் ஒப்படைக்கபட்டுள்ளது.

கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பினை சேர்ந்த 80 அகவையுடைய வேலு சின்னத்தம்பி என்பவர் நெஞ்சுவலி காரணமாக இன்று தனிமைப்படுத்தல் முகாமில் மயங்கி வீழ்ந்துள்ளார் இவரை முல்லைத்தீவ மாவட்ட மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் எடுத்து சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.

இவரின் மாதிரிகள் பரிசோதனைக்காவும் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மாலை 5.00 மணியளவில் கேப்பாபுலவு விமானப்படைத்தள கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 80 அகவை மதிக்கத்தக்க மற்றும் ஒருவர் உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருவரின் உயிரிழப்புக்கள் தொடர்பில் சடலங்களிலிருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இருவர்களின் உடலங்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர்களின் உயிரிழப்பு தொடர்பிலான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir