புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு அதிரடி தீர்மானம்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் சில வினாக்களுடன் கூடிய மாதிரி வினாத்தாள் அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரினால் வௌியிடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன், குறித்த 03 கேள்விகளை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் கடந்த 17ஆம் திகதி தீர்மானித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (18) காலை பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவை வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது அவசியமானால் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பெற விண்ணப்பித்த மாணவர்களின் பெற்றோர்கள் குழுவும் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply