வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்கு முன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்த கூடிய ஆவணங்கள் தொடர்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்திருந்தார்.
” வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டையின் பழைய மற்றும் புதிய அடையாள அட்டைகள் இரண்டும் வாக்களிக்க செல்லுபடியாகும். மேலும், செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம், அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை, பழைய அல்லது ஈ-அடையாள அட்டை ஆகிய இரண்டும் செல்லுபடியாகும்.
தொடர்ந்து, தெளிவற்ற அடையாள அட்டைகள், புதிய தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது இல்லாத வேறு எந்த ஆவணமும் வாக்குச்சாவடியில் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.