அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.