வௌ்ள அபாய எச்சரிக்கை!

நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை சுமார் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை மேலும் நீடித்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய தற்போது பாகொட, கொடபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்திரலிய, மாலம்பட, கம்புறுபிட்டிய, திஹகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலக பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் வௌ்ள அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பிரதேசங்களில் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply