
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமையவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.