பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (11) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கி பயணித்த காரின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்ததுடன் அவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே 10 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர்கள் மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
