பொலிஸ் உத்தியோகத்தர் பலி! தம்புள்ளையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 9 பிரதான வீதியில் தம்புள்ளை, புலாகல பகுதியில் நேற்று மாலை (புதன்கிழமை 11) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கலன்பிந்துனுவெவ, மொரகொட பகுதியைச் சேர்ந்த, கெக்கிராவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் அதிகாரி என தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளையிலிருந்து கெக்கிராவ நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று, கெக்கிராவையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமை நிமித்தம் மாத்தளை நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தம்புள்ளை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply