புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.
புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள சபாநாயகர் தொடர்பில் சர்ச்சை எழுந்தால் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடாத்தப்படும்.
தமது கல்வி தகமையை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அசோக ரன்வல அறிவித்திருந்தார். பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
