புதிய சபாநாயகர் பதவிக்கு பெயர்கள் முன்மொழிவு!

புதிய சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தவேளையில், வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஷமன் நிபுணாரச்சி ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply