வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதாவது, வரி பணம் செலுத்த தவறிய நபர்கள் 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்பட மாட்டாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் உள்நாட்டு இறைவரி கட்டளை சட்டங்களின் பிரகாரம் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவர்களுக்கு எதிராக 2025 ஜனவரி மாதத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எஞ்சிய வருமான வரி செலுத்தாத நபர்களுக்கு முன் அறிவிப்பின்றி அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள வரி பணத்தின் அளவுக்கமைய குற்றவியல் வழக்கு தொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply