தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இந்த வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண்களும், 122,358 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் தாண்டியுள்ளது இது இரண்டாவது முறையாகும், இதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply