“இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது”- மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

“இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது” என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக கருத்து தெரிவித்தபோதே, இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது என்று கூறினார்.

தற்போது பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால் வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று கூறியதோடு, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பொருத்தமான நிதிக் கொள்கைகள் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply