முல்லைத்தீவு கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது. இந்த படகில் மியான்மாரில் இருந்து அகதிகளாக வருகைதந்த 103 பேர் இருந்துள்ளனர்.
அவர்களை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்
