பஸில் ராஜபக்சவை நாடு கடத்துமாறு ட்ரம்புக்கு கடிதம்- மேர்வின் சில்வா!

பஸில் ராஜபக்சவை நாடு கடத்துமாறுகோரி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் எழுதவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில், பஸில் ராஜபக்ச எனது உறவு முறை பெண்ணையே மணம் முடித்துள்ளார். இருந்தாலும் அவர் ஊழல்வாதி, கொள்ளைக்காரன். பஸில் ஊழல்வாதி என்பதற்குரிய சான்றுகள் என்வசம் உள்ளன. எனவே, அவரை நாடு கடத்துமாறு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்புக்கு கடிதம் எழுதவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply