உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி!

“உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயற்பாடு சில கட்டுப்பாடுகளுடனே இடம்பெறுகின்றது ” என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். அத்துடன் 10,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கவுள்ளதாகவும் கூறினார்.

சந்தையின் தேவையைக் கருத்தில் கொண்டு, அரிசி இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப் பகுதியை நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply