அதிகரித்த மதுபான சாலைகள் திறப்புக்கு எதிராக கண்டன பேரணி!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பேரணியைத் தொடர்ந்து, மத தலைவர்கள் இணைந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரனிடம் கையளித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், வர்த்தக சங்கத்தினர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply