இன்று (24) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 17 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தனுஷ்கோடிக்கும் – தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் இவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
