முட்டை விலை குறைந்தாலும் அது சார்ந்த உணவுகளின் விலையில் மாற்றமில்லை!

முட்டை விலை சடுதியாக குறைவடைந்தாலும் முட்டை அப்பம், முட்டை ரொட்டி, ஆகியவற்றின் விலை குறையாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 58 ரூபாய் தொடக்கம் 60 ரூபாயாக காணப்பட்ட போது, முட்டை அப்பம் மற்றும் ​​முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை 130 தொடக்கம் 140 ரூபாயாக அதிகரித்தது.

ஆனால் தற்போது முட்டையின் விலை 30 முதல் 32 ரூபாய் வரை குறைந்துள்ள போதும் முட்டை அப்பம் மற்றும் ​​முட்டை ரொட்டியின் விலை முன்பு போலவே உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply